அதிக பாரம் ஏற்றிய 9 லாரிகள் பறிமுதல்
அதிக பாரம் ஏற்றிய 9 லாரிகள் பறிமுதல்
கன்னியாகுமரி
களியக்காவிளை:
குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் பாறை கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு அந்த லாரிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் களியக்காவிளையில் போலீசார் நடத்திய சோதனையில் அதிகபாரம் ஏற்றி வந்த 7 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் குழித்துறை வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு சென்ற 9 கனரக லாரிகளை களியக்காவிளையில் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அதன் உரிமையாளர் யார்? என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story