தூத்துக்குடியில் சூதாடிய 9 பேர் கைது


தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி டேவிஸ்புரம் டாஸ்மாக் கடை ஞான பிரகாசம் (43), நிக்கோலஸ் மணி (54), சவுந்தர்ராஜ் (50), லாசர் (56), சங்கர் (58), விஜி (46), ராமநாதன் (67), குருசாமி (35), ராஜாமணி (60) ஆகிய 9 பேர்பணம் வைத்து சூதாடினர். அவர்களை தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 788 ரொக்கப்பணம், 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story