தொழிற்சாலையில் ரூ.14 லட்சம் தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது
தொழிற்சாலையில் கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்க செய்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
தொழிற்சாலையில் கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்க செய்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து கோவை தெற்கு பகுதி துணை கமிஷனர் சிலம்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமிர கம்பிகள் திருட்டு
கோவை பீளமேடு பகுதியில் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு டிரான்ஸ்பார்மர் கருவிகள் தயார் செய்யப்படுகிறது. அதை தயாரிக்க பயன்படும் தாமிர கம்பிகள் தொழிற்சாலைக்குள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி ஒரு கும்பல் தொழிற்சாலைக்குள் புகுந்து 1,440 கிலோ எடையுள்ள தாமிர கம்பிகளை திருடி ஒரு சரக்கு வேனில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கேமராக்கள் செயல் இழப்பு
விசாரணையில் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்க செய்து விட்டு திருட்டு ஆசாமிகள் கைவரிசையை காட்டி உள்ளனர். எனவே அங்குள்ள மற்ற கேமராக ்களில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் குற்றவாளிகள் தொடர்பான தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து பல்லடம் அருகே சாமிகவுண்டன்பாளையத்தில் பழைய இரும்பு வியாபாரம செய்யும் ஜோதிலிங்கம் (வயது25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தூத்துக்குடி மாவட்டம் புத்தன்தருவையை சேர்ந்தவர். இவர் இந்த தாமிர கம்பிகளை குறைந்த விலையில் குற்றவாளிகளிடம் இருந்து வாங்கி உள்ளார். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகள், மீட்கப்பட்டது. ஒரு சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
9 பேர் கைது
இந்த திருட்டில் தொடர்புடைய கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியை சேர்ந்த ஆனந்தகுமார் (27), திருப்பூரை சேர்ந்த அமீர் பாஷா (24), சத்தியமங்கலத்தை சேர்ந்த சூர்யா (23), பொள்ளாச்சியை சேர்ந்த பிரபு (22), கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த செந்தில்குமார் (32), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (42), காரமடையை சேர்ந்த ஆனந்த் (25) மற்றும் ஒண்டிப்புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான வியாபாரி ஜோதிலிங்கம் குற்றவாளிகளுக்கு ஆசைவார்தை கூறி, திருடி கொடுக்கும் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி உள்ளார். ஆனந்தகுமார் மீது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களில் 11 திருட்டு வழக்கு, ஆனந்த் மீது 3 திருட்டு வழக்கு, செந்தில் குமார் மீது அடிதடி வழக்கு உள்ளது. கைதான 9 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இவ்வாறு அவர் கூறினார்.