வேலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் செய்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் சளிமாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 9 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதில், 5 பேர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 9 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக்குழுவினரின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story