வடமதுரையில் சூதாடிய 9 பேர் கைது


வடமதுரையில் சூதாடிய 9 பேர் கைது
x

வடமதுரையில் சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை:

வடமதுரை, திண்டுக்கல் சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 9 பேர் அடங்கிய கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சூதாடியதாக செங்குளத்துபட்டியை சேர்ந்த மலையப்பன் (வயது 40), சாமிநாதன் (35), வி.சித்தூரை சேர்ந்த குமார் (35), வங்கமனூத்தை சேர்ந்த சந்தியாகு (55), சிங்காரக்கோட்டையை சேர்ந்த பசுங்கிளி (36), எரியோட்டை சேர்ந்த ஜெயராமன் (52) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,500 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story