பள்ளி ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு
சோளிங்கர் அருகே பள்ளி ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அஞ்சலக வீதியில் வசிப்பவர் பாலகதிரேசன். இவரது மனைவி பாரதி (வயது 40). இவர் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையா வேலை செய்கிறார். இவர் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் சாப்பிட்டு விட்டு மறுபடியும் பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்றார்.
பள்ளி அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், பாரதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சரடு, 3 பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து கொண்ட பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story