தொழிலாளிக்கு 9 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 9 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திண்டுக்கல்

பழனியை அடுத்த பெருமாள்புதூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் அய்யர் (வயது 49). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு இவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அய்யர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட அய்யருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.


Next Story