90 பேரிடர் மீட்பு வீரர்கள் தயார்


90 பேரிடர் மீட்பு வீரர்கள் தயார்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் 90 பேரிடர் மீட்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், வெள்ளத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காகவும் தேவையான மீட்பு உபகரணங்களுடன் காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திற்கும் ஒரு பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட ஆயுதப்படையில் 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் உள்பட தலா 15 பேர் கொண்ட 6 பேரிடர் மீட்புக்குழுக்களில் 90 பேரிடர் மீட்பு வீரர்கள், பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பேரிடர் மீட்பு உபகரணங்களான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள், மருத்துவ முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவைகளுடன் போலீசாரும், மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story