பல்லடத்தில் ரூ.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
பல்லடத்தில் ரூ.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
பல்லடம்
பல்லடத்தில் ரூ.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
பூங்கா திறப்பு
பல்லடம் நகராட்சி சின்னையா கார்டனில் ரூ.90 லட்சத்தில் பூங்கா மற்றும் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகளுடன் வருவோர் தங்கும் விடுதி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார். விழாவுக்கு வினீத் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், தாசில்தார் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொறியாளர் ஜான்பிரபு வரவேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். திருப்பூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் புதிதாக நகர்ப்புற மருத்துவமனை என்கிற வகையில் பல்லடம் நகராட்சி பகுதியில் இரண்டு நகர்புற மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உரிய மருந்துகள் வழங்க பயன்படுத்தப்பட இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக மோசமான நிர்வாகத்தால் தமிழக நிதி நிலை சரியில்லாமல் போய்விட்டது. நிதி நிலை சீரடைந்த பின்னர் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். இந்திய அளவில் பல்வேறு துறைகளில் தமிழகம் பின் தங்கி இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் தொழில் துறை 14 வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது போல் அனைத்து துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் வருங்காலங்களில் காண்போம்.
இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை விடுத்து இருப்பது குறித்து கேட்டதற்கு நான் அதனை வழி மொழிகிறேன் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலுசாமி, அரசு அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
--------
3 காலம்
பல்லடம் நகராட்சி சின்னையா கார்டனில் பூங்காவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்த போது எடுத்த படம்