90 வயது முதியவர், மனைவியுடன் தற்கொலை


90 வயது முதியவர், மனைவியுடன் தற்கொலை
x

90 வயது முதியவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை

மேலூர்,

90 வயது முதியவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

வயதான தம்பதி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சின்ன சூரக்குண்டு கிராமம், நாகலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்தையா என்ற கூலு (வயது 90). இவருடைய மனைவி ராக்கு (70).

இவர்களுக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உண்டு. திருமணம் ஆகி பிள்ளைகள் வெவ்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

விஷம் குடித்து தற்ெகாலை

முதுமை காலத்தில் தங்களை கவனிக்க ஆள் இல்லாததால் இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர். இதனால் இருவரும் விஷம் குடித்து வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story