திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
18,084 பேர் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 213 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 791 மாணவர்கள், 10 ஆயிரத்து 698 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 489 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.இதில் 7 ஆயிரத்து 839 மாணவர்கள், 10 ஆயிரத்து 245 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 084 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.79 சதவீதம் ஆகும். மாணவர்கள் 89.17 சதவீதமும், மாணவிகள் 95.77 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் மாநில தரவரிசை பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் 15-வது இடத்தை பிடித்தது.
100 சதவீத தேர்ச்சி
தேர்வு எழுதியவர்களில் 952 மாணவர்கள், 453 மாணவிகள் என மொத்தம் 1,405 பேர் தோல்வியடைந்தனர். இதேபோல் 9 அரசு பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 60 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 6 ஆயிரத்து 223 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88.14 சதவீத தேர்ச்சி விகிதம் ஆகும். கடந்த ஆண்டு பிளஸ்-1 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.38 சதவீதமாக இருந்தது.
அதுவே இந்த ஆண்டு 6.41 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும் இந்த பொதுத்தேர்வில் மாவட்டம் முழுவதும் 9 அரசு பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் பள்ளிகள், 37 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.