திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரேநாளில் 95 ஜோடிகளுக்கு திருமணம்


திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில்  ஒரேநாளில் 95 ஜோடிகளுக்கு திருமணம்
x

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 95 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

முதன்மை பெற்ற தலம்

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் திருமணம் செய்து கொள்வேன் என வேண்டிக் கொண்டவர்கள் சுபமுகூர்த்த நாள் அன்று இருவீட்டார், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து செல்கிறார்கள். இதனால் இந்த கோவிலில் சுப முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெறும்.

95 திருமணங்கள்

அந்த வகையில் ஆடி மாதம் முடிந்து நேற்று முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் அதிகாலை 4 மணி முதல் கோவில் மலையில் உள்ள திருமண மண்டபத்தில் 75 திருமணங்களும், திருவந்திபுரம் தனியார் மண்டபங்களில் 20 திருமணங்கள் என மொத்தம் 95 திருமணங்கள் நடைபெற்றது. இதையடுத்து மணமக்கள் மற்றும் திருமணங்களில் கலந்து கொண்டவர்கள் கோவிலுக்கு சென்று தேவநாத சாமியை தரிசனம் செய்தனர்.

ஒரே நாளில் 95 திருமணம் நடைபெற்றதால் திருமணங்களுக்கு வந்தவர்கள், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் தங்களது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கோவிலையொட்டியுள்ள தெருக்களில் நிறுத்திச் சென்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


Next Story