அனைத்து அலுவலர்களும் மலை நோக்கி பயணம் திட்டம் மூலம் 96 பேருக்கு இந்து மலையாளி சான்றிதழ்


அனைத்து அலுவலர்களும் மலை நோக்கி பயணம் திட்டம் மூலம் 96 பேருக்கு இந்து மலையாளி சான்றிதழ்
x

அனைத்து அலுவலர்களும் மலை நோக்கி பயணம் திட்டம் மூலம் 96 பேருக்கு இந்து மலையாளி சான்றிதழ் வழங்கப்பட்டது

திருப்பத்தூர்

திருப்பத்துார் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்களின் நலன் காக்க அனைத்து துறை அலுவலர்களும் மலை நோக்கி பயணம் என்ற திட்டம் மேற்கொண்டதில் மலைப்பகுதியில் வசிக்கும் 96 பேருக்கு இந்துமலையாளி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மலை நோக்கிப் பயணம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைவாழ்மக்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் கிடைப்பதற்காக அனைத்து அலுவலர்களும் மலைநோக்கி பயணம் என்ற திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். அதன்படி புதுார் நாடு, புங்கம்பட்டு, நெல்லிசல்நாடு, ஏலகிரி மலை, நாயக்கனேரி, பீமகுளம் ஆகிய மலை கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினர் மக்களின் துயர், துடைக்கும் பொருட்டு அங்கு வருவாய்த்துறை துணை கலெக்டர் ஒருவர் தலைமையில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர் கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பஞ். செயலர்கள், காப்பீடு திட்ட களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் மாபெரும் கணக்கெ டுப்பு மேற்கொள்ள கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார்.

இந்த கணக்கெடுப்பின்படி ஆங்காங்கு உள்ள மலைவாழ் மக்களுக்கு பழங்குடியினர் இனச் சான்று, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, காப்பீடு திட்ட அட்டை உள்ளிட்டவைகளை உடனுக்குடன் அங்கேயே வழங்கிடவும் கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்..

இதைத் தொடர்ந்து, அரசு வழங்கிடும் அனைத்து சலுகை களையும் எளிதில் பெறும் வண் ணம். இங்கு வசிக்கும் 80 ஆயிரத் துக்கும் அதிகமான பழங்குடியினரில் ஒருவர் கூட விட்டுப் போகாத அளவுக்கு பணிகள் முடிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

அதிகாரிகள் நியமனம்

இதன் அடிப்படையில் ஏலகிரி பகுதிக்கு சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கோவிந்தன், புதூர் நாடு பகுதிக்கு உதவி ஆணையர் (கலால்) பானு, நெல்லிவாசல் பகுதிக்கு திருப்பத்துார் சப்-கலெக்டர் லட் சுமி, நாயக்கனேரி பகுதிக்கு வாணியம்பாடி சப்-கலெக்டர் பிரேமலதா, பீமகுளம் பகுதிக்கு பழங்குடியினர் நல திட்ட இயக்குனர் கலைச்செல்வி, புங்கம்பட்டு நாடு பகுதிக்கு பழங்குடியினர் நல அலுவலர் சரஸ்வதி ஆகியோர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் மூலம் மலைவாழ் மக்களுக்கு செய்ய வேண்டிய 37 பணிகள் பட்டியலிடப்பட்டு, அதிகாரிகள் மற்றும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள குழுக்களிடம் நகல்கள் வழங்கப்பட்டது.

அதன்படி, அதிகாரி மேற்பார்வையில் குழுவினர் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு, வீடாகச் சென்று, அவர்களுக்கு ஆதார் கார்டு உள்ளதா? ரேஷன் கார்டு உள்ளதா? மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளதா? என்பது தொடங்கி, 37 வகையான கேள்வி கள் கேட்கப்பட்டு, அந்த படிவம் நிரப்பப்படுகிறது.

நேற்று இதன்படி விசாரணை நடத்தி 96 பேருக்கு இந்து மலையாளி என சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் இந்த பணிகள் முழுவதும் முழுமை அடைந்ததும், அவர்ள் கேட்ட சான்றுகள் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று வழங்கப்படும். என தெரிவித்தனர். இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Next Story