96 கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு


96 கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு
x

எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் சார்பில் 96 கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை சார்பில் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் அதன் பிரதான சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை போலீசாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காணிப்பு கேமராக்களை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் எம்.ஆர்.எப். பொது மேலாளர் ஜான் டேனியல் ஆகியோர் இயக்கி வைத்தனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறியதாவது:-

எம்.ஆர்.எப். நிறுவனம் இப்பகுதி பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது எம்.ஆர்.எப். சார்பில் அரக்கோணம் காவல் உட் கோட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 96 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். இது போன்ற பணிகளுக்காக காவல் துறை சார்பில் நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. வரும் காலத்தில், தேவைக்கேற்ப கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தர வேண்டியும் பொது மேலாளர் ஜான் டேனியலிடம் கேட்டுள்ளோம். மேலும், பொது மக்கள் குடியிருக்கும் அவர்களின் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் முன் வர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், எம்.ஆர்.எப். நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன், முதன்மை பொறியாளர் எல்வின், எம்.ஆர்.எப். முதன்மை பாதுகாப்பு அலுவலர் பிரசாத் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story