திருச்சி மாவட்டத்தில் 96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். இதில் 12 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். இதில் 12 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
96.02 சதவீதம் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 34,392 மாணவ- மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 258 பள்ளிகளைச் சேர்ந்த மற்றும் தனித்தேர்வர்கள் என 14,390 மாணவர்களும், 16,520 மாணவிகளும் என மொத்தம் 30,910 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,482 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 13,520 மாணவர்கள், 16,159 மாணவிகள் என மொத்தம் 29,679 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.02 சதவீதம் ஆகும். இதில் 1,231 பேர் தேர்ச்சி பெறவில்லை.
258 பள்ளிகள்
இதில் ஆதி திராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் 88.78 சதவீதம் பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் 99.56 சதவீதமும், முழு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 96.74 சதவீதமும், அரசு பள்ளி மாணவர்கள் 92.74 சதவீதமும், பகுதி அளவு அரசு உதவி பெறும் பள்ளிகள் 98.51 சதவீதமும், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 99.02 சதவீதமும், சுயநிதி (டி.எஸ்.சி.) பள்ளி மாணவர்கள் 98.41 சதவீதமும், பழங்குடியின நல பள்ளி மாணவர்கள் 97.65 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 258 பள்ளிகளில் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.