தமிழ்நாட்டில் மேலும் 97 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில்  மேலும்  97 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 97 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 43 பேர், பெண்கள் 54 பேர் அடங்குவர். சென்னையில் அதிகபட்சமாக 21 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் 15 பேரும், கோவையில் 14 பேரும் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 320 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,426 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு இல்லை. இதேபோல, இன்று உயிரிழப்பும் ஏற்படவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story