முத்திரையிடப்படாத 97 தராசுகள் பறிமுதல்


முத்திரையிடப்படாத 97 தராசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Sept 2023 1:00 AM IST (Updated: 14 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தினசரி காய்கறி சந்தையில் முத்திரையிடப்படாத 97 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) மைவிழி செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் எல்லைக்குட்பட்ட திருமங்கலம் பகுதியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது எடை அளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடப்படாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த மின்னணு மற்றும் விட்ட தராசு உள்ளிட்ட 97 எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன மேலும் தெருவோர வியாபாரிகள், நடைபாதை கடைகள், தள்ளு வண்டி கடைகள், இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில் உபயோகப்படுத்தப்படும் எடையளவுகளை மறுபரிசீலனை செய்து முத்திரையிடுமாறும் அதற்குரிய மறுபரிசீலனை சான்றிதழ் ஆய்வின் போது காண்பிக்கும் வகையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வணிகர்கள் தராசு உள்ளிட்ட எடை அளவுகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் வாங்கும்பொழுது எடை அளவுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்தும் மாறும் அதற்கான மறுபரிசீலனை சான்றிதழ் கேட்டுப் பெறுமாறும் தெரிவிக்கப்படுகிறது. எடை அளவுகள் உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு 2009-ம் ஆண்டு சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டுக்கு ரூ.25ஆயிரம் வரையும் அபராதமும் இரண்டாம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது என தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.


Next Story