99-வது ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழா


99-வது ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழா
x

அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளியில் 99-வது ஹெலிஹாப்டர் விமானி பயிற்சி நிறைவுவிழா நடந்தது. இதில் இந்திய கடற்படை கோவா பிராந்திய அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளியில் 99-வது ஹெலிஹாப்டர் விமானி பயிற்சி நிறைவுவிழா நடந்தது. இதில் இந்திய கடற்படை கோவா பிராந்திய அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.

பயிற்சி நிறைவு விழா

அரக்கோணம் இந்திய கடற்படை விமான தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் கடந்த 22 வாரங்களாக ஹெலிகாப்டர் விமானி பயிற்சி மேற்கொண்ட 9 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான 99-வது ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக இந்திய கடற்படை கோவா பிராந்திய கமாண்டிங் ரியர் அட்மிரல் விக்ரம் மேனன் கலந்து கொண்டு கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பயிற்சி முடித்த 9 கடற்படை வீரர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பணிக்கு செல்கின்றனர்

நிகழ்ச்சிக்கு அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியின் கமாண்டிங் அதிகாரி கமோடோர் ஆர்.வினோத் குமார் தலைமை தாங்கினார். ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி பள்ளியின் முதல்வர் கேப்டன் பீரேனோகுமார் பாண்டே முன்னிலை வகித்தார்.

பயிற்சியில் விமானிகளுக்கு ஹெலிகாப்டர் பறக்கும் நுணுக்கங்கள், வழி செலுத்தல், இரவு பறத்தல், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பயிற்சி நிறைவு செய்த விமானிகள் மும்பை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பணிக்கு செல்கின்றனர். இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளில் இருந்து இது வரை 795 விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கடற்படை அலுவலர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்கள்.


Next Story