9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
க.பரமத்தி அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவி
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பவுத்திரம் ஊராட்சி முத்து சோளி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் தரணிகா ஸ்ரீ (வயது 13). இவர் பவுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் தரணிகா ஸ்ரீ வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது தாயுடன் செல்போனில் பேசி உள்ளார்.
இதற்கிடையில் பள்ளிக்கு சென்று விட்டு தரணிகாஸ்ரீயின் அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்துள்ளது.
தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, தரணிகா ஸ்ரீ சேலையில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் தரணிகாஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தாரணிகாஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தரணிகாஸ்ரீ எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.