9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
திமிரி அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 38). வேலூரில் உள்ள சுவீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி தனது வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது நடந்ததை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி மோகன்தாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Related Tags :
Next Story