காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான 9-ந் தேதி தேர்தல்


காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான 9-ந் தேதி தேர்தல்
x

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

திருவண்ணாமலை


தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் அம்மணப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் போளூர் ஒன்றியத்தில் வாழியூர் ஊராட்சி, தண்டராம்பட்டு ஒன்றியத்தில் சாத்தனூர் ஊராட்சி, அனக்காவூர் ஒன்றியத்தில் தேத்துறை ஊராட்சி, பெரணமல்லூர் ஒன்றியத்தில் மேல்சாத்தமங்கலம் ஊராட்சி மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் முருகமங்கலம் ஊராட்சி ஆகியவற்றில் வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் காலியாக உள்ளன.

இவற்றுக்கான தேர்தல்கள் வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் அனைத்திற்கும் தேர்தல் நாளான 9-ந் தேதியன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஜூலை 12-ந் தேதியன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story