வலிப்பு ஏற்பட்டு சிறுவன் விழுந்ததில் 1½ வயது குழந்தை பலி


வலிப்பு ஏற்பட்டு சிறுவன் விழுந்ததில் 1½ வயது குழந்தை பலி
x

ஜோலார்பேட்டையில் விளையாடிக்கொண்டிருந்த போது சிறுவனுக்கு வலியுப்பு ஏற்பட்டு 1½ வயது குழந்தைமீது விழுந்தான். இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் விளையாடிக்கொண்டிருந்த போது சிறுவனுக்கு வலியுப்பு ஏற்பட்டு 1½ வயது குழந்தைமீது விழுந்தான். இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

வலிப்பு ஏற்பட்டு விழுந்தான்

திருப்பத்தூரை அடுத்த ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன். இவரது மனைவி ஆர்த்தி (வயது 24). இவர்களுக்கு 1½ வயதில் பிரித்திக்‌ஷா ஸ்ரீ என்ற குழந்தை உண்டு. ஆர்த்தி கடந்த சில மாதங்களாக ஜோலார்பேட்டையில் உள்ள சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் உள்ள தாய்வீட்டில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் பிரித்திக்‌ஷா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் அருகே உள்ள மனோகரன் என்பவரின் மகன் ராகுல் (15) பிரித்திக்‌ஷா ஸ்ரீ யுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ராகுலுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு பிரித்திக்‌ஷா ஸ்ரீ மீது விழுந்துள்ளான்.

குழந்தை பலி

இதில் குழந்தை படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து குழந்தையின் தாய் ஆர்த்தி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story