திருப்பரங்குன்றம் அருகே 10 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது
திருப்பரங்குன்றம் அருகே 10 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது. பின்னர் வனத்துறை அலுவலர் மலைப்பாம்பை நாகமலைபுதுக்கோட்டை வனப்பகுதியில் விட்டார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி முனியாண்டிபுரம் அருகே தென்கால் கண்மாய்க்கு வைகை தண்ணீர் செல்லும் கால்வாயில் சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு மலைபாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த பாம்பு பிடிக்கும் திருநகர் சகாதேவன் உரிய இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தார். பின்னர் அவர் வனத்துறை அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்து அந்த மலைபாம்பை ஒப்படைத்தார். இதனையடுத்து வனத்துறை அலுவலர் மலைப்பாம்பை நாகமலைபுதுக்கோட்டை வனப்பகுதியில் விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலையூர் கால்வாய் சார்ந்த ஹார்விப்பட்டி கலங்கரையில் ஒரு மலைபாம்பு சிக்கியது. சமீபத்தில் பெய்த தொடர் மழையாலும், வைகை அணையில் இருந்து நிலையூர் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடிவந்தாலும் அதில் மலைப்பாம்பு வந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.