வீட்டில் 10 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது


வீட்டில் 10 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது
x

வீட்டில் 10 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 20). நேற்று இவரது ஓட்டு வீட்டின் மேற்பகுதியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்ட மணிகண்டன் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஓடுகள் மீதிருந்த 10 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.


Next Story