சமூக ஆர்வலர் கொலை குறித்து 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு


சமூக ஆர்வலர் கொலை குறித்து 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு
x
தினத்தந்தி 17 Sept 2022 10:33 PM IST (Updated: 17 Sept 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

க. பரமத்தி அருகே சமூக ஆர்வலர் கொலை குறித்து 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்தனர்.

கரூர்

உண்மை கண்டறியும் குழு

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே காளிபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கி தனியார் கல்குவாரியை கனிமளவளத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் ெஜகநாதன் கடந்த 10-ந்தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார் உள்பட 3 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து உடல் வாங்க மறுத்து ஜெகநாதனின் உறவினர்கள் கரூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் முகிலன், சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 நாள்கள் போராட்டத்திற்கு பிறகு ஜெகநாதன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு சம்பந்தமாகவும், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விசாரிக்க மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது உள்பட 10 கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

ஆய்வு

இந்த குழுவினர் நேற்று கரூர் வந்தனர். பின்னர் கரூர் காளிபாளையத்தில் அமைந்துள்ள சமூக ஆர்வலர் ஜெகநாதன் வீடு, இறந்து போன ஜெகநாதனின் மனைவி ரேவதி, சம்பவம் நடந்த இடம், சம்பந்தப்பட்ட கல் குவாரி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சாட்சிகளை, 10 பேர் கொண்ட குழுவினர் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு சம்பந்தமான விபரங்களை கண்டறிந்தனர்.

பேட்டி

இதையடுத்து கரூரில் நேற்று மாலை மணப்பாறை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் ஏற்கனவே சமூக ஆர்வலர் ஜெகநாதனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை முதலில் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், பின்னர் இந்த வழக்கை சாதாரண அடிதடி வழக்காக மாற்றிருந்தனர். இதனை எதிர்த்து ஜெகநாதன் வழக்கு தொடுத்திருந்தார். இதையடுத்து தான் சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார். க.பரமத்தி பகுதிகளில் 100 அடிக்கும் மேலாக வெடி வெடித்து ஆழம் தோண்டி கல் குவாரி அமைக்கிறார்கள். இதனால் அருகில் உள்ள வீடுகளிலும் விரிசல்கள் ஏற்படுகின்றன. மேற்படி 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளை ஆய்வு செய்தபோது பெரும்பாலானவை அரசு அனுமதி பெறவில்லை. அனைத்து கல்குவாரிகளையும் முதல்-அமைச்சர் தனியாக உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வழங்க வேண்டும், என்றார்.


Next Story