தேர்வு சரிவர எழுதாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தேர்வு சரிவர எழுதாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

லாலாபேட்டை அருகே தேர்வு சரிவர எழுதாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

பள்ளி மாணவி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட கீழக்குப்புரெட்டிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி பரமேஸ்மரி. இந்த தம்பதியின் மகள் லட்சுமி (வயது 15). இவர் புணவாசிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.இதில், நேற்று முன்தினம் நடந்த தேர்வை லட்சுமி சரிவர எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த லட்சுமி தேர்வு சரியாக எழுதாதது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கவலைப்பட்டுள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு செல்ல லட்சுமி தயாராகி கொண்டிருந்தார். அப்போது லட்சுமியின் தாயார் வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமி வீட்டின் மேலே உத்திரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story