12 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது
தடிக்காரன்கோணத்தில் 12 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது.
கன்னியாகுமரி
அழகியபாண்டியபுரம்:
தடிக்காரன்கோணத்தில் 12 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது.
தடிக்காரன்கோணம் அடுத்துள்ள மேல வாழையத்து வயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய வீட்டில் நேற்று ஒரு ராஜ நாகப்பாம்பு வீட்டின் பகுதியில் பதுங்கி கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் பாம்பைப் பார்த்து அலறி அடித்து ஓடினார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் ராஜன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கபில், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதை சாக்குப்பையில் போட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டுவிட்டனர்.
------------
Related Tags :
Next Story