பாண்டியாறு அரசு தேயிலை தொழிற்சாலை அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


பாண்டியாறு அரசு தேயிலை தொழிற்சாலை அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாண்டியாறு அரசு தேயிலை தொழிற்சாலை அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி தேயிலை தோட்டங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பின்னர் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை அருகே மலைப்பாம்பு ஒன்று வந்தது.

இதைக் கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து தேயிலை தோட்ட கழக அலுவலர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நாடுகாணி வனச்சரகர் வீரமணி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தொழிற்சாலை அருகே தேயிலை செடிகளுக்கு அடியில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அடர்ந்த வனத்தில் கொண்டு மலைப் பாம்பு விடப்பட்டது. அதன் பின்னர் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story