15 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது


15 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது
x

பேரணாம்பட்டு அருகே 15 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே உள்ள பண்டாரவாடை பகுதியில் சண்முகம் என்பவர்க்கு சொந்தமான இடத்தில் கருவேல மரங்கள் வளர்ந்திருந்தது. அவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது சுமார் 15 அடி நீள மலை பாம்பு ஒன்று இருந்ததை அறிந்த பொதுமக்கள் பேரணாம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மலை பாம்பை பிடித்து பேரணாம்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மோர்தானா காப்புக்காட்டில் விட்டனர்.


Next Story