கெங்கவல்லி அருகே 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை


கெங்கவல்லி அருகே 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை
x

கெங்கவல்லி அருகே 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

கெங்கவல்லி:

16 வயது சிறுமி

கெங்கவல்லி அருகே உள்ள பெரிய புணல்வாசல் பகுதியை சேர்ந்தவர் தனுசியா (வயது 16). இவருடைய தாய், தந்தை இறந்து விட்ட நிலையில், அந்த பகுதியில் தனது தாய்மாமன் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியநிலையில், அதில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் பள்ளி படிப்பில் தோல்வி மற்றும் பெற்றோர் இல்லாதது சிறுமி தனுசியா மனதை வெகுவாக பாதித்தது. இதனால் மனவேதனையில் அவர் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, தனுசியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதனால் அவர் வலியில் அலறினார். அவருடைய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் படுகாயங்களுடன் கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனுசியா பரிதாபமாக இறந்தார். கெங்கவல்லி போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் இன்றி தவித்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story