குழந்தை பெற்ற 17 வயது சிறுமி


குழந்தை பெற்ற 17 வயது சிறுமி
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அவரை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குளச்சல்:

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அவரை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணி

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்ைத பிறந்தது. இதையடுத்து டாக்டர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு 17 வயதே ஆனது தெரிய வந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் குளச்சல் மகளிர் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தை பெற்ற சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது, வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியை ேசர்ந்த மணிகண்டன் (வயது34), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வேலைக்கு சென்றார்.

9-ம் வகுப்பு மாணவி

அப்போது தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து அந்த சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெள்ளிச்சந்தை சரல் பகுதிக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்த தொடங்கினார். இதில் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story