தண்ணீர் தொட்டியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி


தண்ணீர் தொட்டியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி
x

தண்ணீர் தொட்டியில் விழுந்து 1½ வயது ெபண் குழந்தை பலியானது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 1½ வயது ெபண் குழந்தை பலியானது.

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சித்ரா (25). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இதில் 3-வது குழந்தை சஞ்சனா(1½) விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டாள். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சனாவை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சஞ்சனா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story