பிறந்து 2 நாளான ஆண் சிசு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் வீச்சு
வந்தவாசியில் பிறந்து 2 நாளான ஆண் சிசு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசியில் பிறந்து 2 நாளான ஆண் சிசு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் சிசு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அந்த குப்பைத் தொட்டியை சோதனை செய்துள்ளனர்.
அப்போது குப்பைத் தொட்டியில் பிறந்த குழந்தையின் உடல் பிளாஸ்டிக் பையினுள் போடப்பட்டு கிடந்ததும், குழந்தை இறந்து கிடந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
2 நாட்கள் ஆன சிசு
விசாரணையில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையின் உடலை தொப்புள் கொடியை கூட அறுக்காமல் சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.