நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த மேல்மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பெருமா குட்டி. இவரது மனைவி காவேரியம்மாள் (வயது 70). இவர் தன் வீட்டு அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மூதாட்டி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பிச்சென்ற 2 மர்ம நபர்களையும் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story