தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு
x

தொட்டியம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருச்சி

தொட்டியம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

2 வயது குழந்தை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 25). இவரது மனைவி தெய்வானை. இந்த தம்பதியின் மகன் கிஷாந்த் (2). நேற்று கிஷாந்த் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். தெய்வானை வீட்டிற்குள் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது, வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தமிழ்ச்செல்வன் மனைவியிடம் மகனை பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர் விளையாடி கொண்டிருக்கிறான் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, இருவரும் மகனை தேடியபோது, அங்கு சிமெண்டு தண்ணீர் தொட்டியில் கிஷாந்த் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

சாவு

இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மகனை மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், கிஷாந்த் இறந்து விட்டதாக கூறினார். கிஷாந்தின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story