தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு


தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு
x

வலங்கைமான் அருகே தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

2 வயது குழந்தை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த தென்குவளைவெளி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு 2 வயதில் துருவன் என்ற ஆண்குழந்தை இருந்தது.

நேற்று குழந்தை துருவன் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது வீட்டுக்குள் தண்ணீர் பிடித்து வைத்திருந்த பாத்திரத்திற்குள்(குவளை) துருவன் தவறி விழுந்துள்ளான்.

மயங்கிய நிலையில் கிடந்தது

இதற்கிடையே விளையாடிக்கொண்டிருந்த மகனை காணாததால் கீதா அவனை தேடிப்பார்த்தார். அப்போது குவளைக்குள் துருவன் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த அரித்துவாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story