வைரஸ் காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி


வைரஸ் காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி
x

தேன்கனிக்கோட்டையில் வைரஸ் காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் பந்தஹள்ளியை சேர்ந்தவர் தேவன் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவருைடய 2 வயது பெண் குழந்தைக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரியில் காண்பித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் குழந்தையை ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் காண்பிப்பதற்காக அஞ்செட்டியை அடுத்த நாட்றம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தேவன் அழைத்து சென்றார். அப்போது காய்ச்சல் அதிகமாகி குழந்தை இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story