பிறந்து 3 நாட்களே ஆன ஆண் சிசு சாக்கடையில் வீச்சு...!


பிறந்து 3 நாட்களே ஆன ஆண் சிசு சாக்கடையில் வீச்சு...!
x

கீரனூர் பகுதியில் பிறந்த 3 நாட்களே ஆன ஆண் சிசு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தெற்கு ரத வீதியில் சாக்கடைகள் செல்லும் கால்வாய் பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சிசு கிடைப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பையில் கிடந்த ஆண் சிசுவின் உடலை மீட்டு விசாணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story