சேலத்தில் மூச்சு திணறலால் 3 மாத குழந்தை சாவு


சேலத்தில் மூச்சு திணறலால் 3 மாத குழந்தை சாவு
x

சேலத்தில் மூச்சு திணறலால் 3 மாத குழந்தை இறந்தது.

சேலம்

சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருடைய மனைவி ஜிஜிரா. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த குழந்தைக்கு சாரா என்று பெயர் சூட்டினர். ஆனால் அந்த குழந்தை பிறந்த நாள் முதலே தோல் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவ்வப்போது சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த குழந்தை சாராவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே குழந்ைத இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story