5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு
நெல்லை அருகே 5 மாத ஆண் குழந்தை திடீரென இறந்தது.
நெல்லை அருகே கீழப்பாட்டம் யாதவர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் மனைவி கன்னியம்மாள். இவர்களின் 5 மாத ஆண் குழந்தை கணேசன். இந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாம். நேற்று காலையில் குழந்தைக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் பெற்றோர் அந்த குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire