கோழி கூண்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது


கோழி கூண்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே கோழி கூண்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவில் குடியிருப்பவர் குருசாமி மகன் ராமமூர்த்தி (வயது 42). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இவரது மனைவி முருக வேணி 2 குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். இவர்கள் வீட்டு முன்பு கோழி கூண்டு வைத்து, கோழி வளர்த்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் மாலையில் முருக வேணி கோழிகளை கூண்டுக்குள் அடைத்து பூட்டிவிட்டு வந்தார். அப்போது கூண்டுக்குள் அடைத்த கோழிகள் கத்தின. உடனே முருக வேணி கூண்டு அருகே போய் பார்த்தபோது, உள்ளே பெரிய நல்ல பாம்பு கோழி குஞ்சை கவ்வியபடி கிடந்தது. இதுபற்றி பஞ்சாயத்து துணை தலைவர் காசி ராஜனுக்கு, முருக வேணி தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்து விட்டு கோவில்பட்டி தீயணைப்பு படை நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் தீயணைப்பு படை அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் வந்து கோழி கூண்டில் கிடந்த 6 அடி நீளமுள்ள கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை குருமலை வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர்.


Next Story