கண்களை மூடி ஸ்கிப்பிங் செய்தவாறு 2.5 கிலோ மீட்டர் ஓடிய 6 வயது மாணவி
கண்களை மூடி ஸ்கிப்பிங் செய்தவாறு 2.5 கிலோ மீட்டர் தூரம் 6 வயது மாணவி ஓடினார்.
திருச்சி
சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி பார்க் ஓவர் குழு நடத்திய புதிய சாதனை முயற்சியில் 6 வயது மாணவி ச.ஆராதனா கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கொண்டே ஓடினார். இதில் 2.5 கிலோ மீட்டர் தூரம் கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கொண்டே ஓடி தனது இலக்கை அடைந்தார். இதற்காக அவர் 15 நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்துள்ளார். பல விளையாட்டு துறைகளில் சாதனை புரிவதே தனது லட்சியமாக வைத்துள்ள மாணவி ஆராதனா இதுவரை வில்வித்தை, தற்காப்பு கலையான தேக்வாண்டோ போன்றவற்றில் பல பதக்கத்தை வென்றவர் என்று குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து 7 வயது மாணவி ஆரண்யா திருச்சி அறிவியல் பூங்காவில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை கண்களை மூடிக்கொண்டு ஓடி இலக்கை அடைந்தார்.
Related Tags :
Next Story