மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்


மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்
x

மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்

தஞ்சாவூர்

வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஜாசமுத்திரம் காட்டாறு

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டிகுளம் ஊராட்சியில் மகாராஜாசமுத்திரம் காட்டாறு ஓடுகிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வகோட்டை, திருவோணம், ஊரணிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த போது அதன் தண்ணீர் இந்த மகாராஜாசமுத்திரம் காட்டாறு மூலம் கொண்டிக்குளம், பண்ணவயல், கோட்டாக்குடி, கார்காவயல், ராஜாமடம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மல்லிப்பட்டினம் கடலில் சென்று கலக்கிறது.

இந்த காட்டாற்றின் 2 புறங்களிலும் தூர்வாரி அகலப்படுத்தி ஆழப்படுத்தி முட்புதர்களை அகற்றி தடுப்பணை கட்டி மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கின்ற தண்ணீரை தேக்கி வைத்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்

மழைக்காலங்கள் மட்டுமல்லாது கோடைகாலத்தில் கூட விவசாயம் செய்வதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். கனமழை பெய்யும் போது அந்த தண்ணீர் முழுவதுமே நேரடியாக மல்லிப்பட்டினம் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இப்படி வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விவசாயிகள் பயனடைவார்கள்.

மேலும் திருவோணம், ஊரணிபுரம், காட்டாத்தி, நம்பிவயல், ஏனாதி, பாலமுத்தி, கொண்டிக்குளம், பண்ணவயல், கார்காவயல், கோட்டாக்குடி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, பள்ளிகொண்டான், ராஜாமடம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு குடிநீர் பிரச்சினையும் தீர்ந்து விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் தடுப்பணை கட்டி வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story