அடிபட்டு கிடந்த கருவுற்ற மான்


அடிபட்டு கிடந்த கருவுற்ற மான்
x

அடிபட்டு கிடந்த கருவுற்ற மான் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையத்தில் நேற்று இரவு ஒரு மான் அடிபட்டு காயங்களுடன் கிடந்தது. மேலும் அந்த மான் பெண் மான் என்றும், கருவுற்ற நிலையிலும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மானை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் அடிபட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story