கிராமத்துக்குள் புகுந்த கரடி


கிராமத்துக்குள் புகுந்த கரடி
x

களக்காடு அருகே கிராமத்துக்குள் கரடி புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே கிராமத்துக்குள் கரடி புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கரடி அட்டகாசம்

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளில் சமீப காலமாக யானை, கரடி, கடமான், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து வருகின்றன. அவை நெல், வாழை, தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தியும் செல்கின்றன.

களக்காடு அருகே பூலங்குளம் பத்துக்காட்டில் உள்ள தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் கரடி புகுந்து, அங்கிருந்த குலை தள்ளிய வாழை மரங்களை சாய்த்து பழங்களை தின்று சேதப்படுத்தின. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

கோவிலுக்குள் புகுந்தது

இந்த நிலையில் களக்காடு அருகே பெருமாள்குளம் கிராமத்துக்குள் நேற்று அதிகாலை ஒரு கரடி புகுந்தது. அது அங்குள்ள இசக்கியம்மன் கோவிலுக்குள் புகுந்து தீப விளக்குகளில் இருந்த எண்ணெய்யை குடித்தது. இந்த காட்சி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தால் பெருமாள்குளம் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கரடியால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும் புகார் தெரிவித்து உள்ளனர்.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

எனவே, ஊருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த கரடி களக்காடு மலையில் இருந்து தப்பி வந்த கரடியாக இருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story