தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கரடி


தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கரடி
x

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் கரடி இறந்து கிடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி சுண்டட்டி கிராமத்திற்கு அருகே தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு கரடி ஒன்று படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனச்சரகர் செல்வகுமார், வனக் காப்பாளர்கள் நாகேஷ், வினோத் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடியின் உடலை ஆய்வு செய்தனர். மேலும் நீலகிரி வன கோட்ட அலுவலர் சச்சின் துக்காராம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டு, கரடி உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அதே பகுதியில் எரிக்கப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து போனது 8 வயதான ஆண் கரடி ஆகும். இனபெருக்க காலத்தில் பெண் கரடியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டு ஆண் கரடி இறந்து இருக்கலாம். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கரடி இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றனர்.


Next Story