கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் உலா வந்த கரடி-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் கரடி உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் கரடி உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கரடி உலா
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் கரடிகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் தொடர்ந்து உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. சற்று நேரம் சாலையிலேயே உலா வந்த கரடி பின்னர் அருகிலிருந்த புதர் மறைவிற்குள் சென்று மறைந்தது. கரடியைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி கரடியை தங்களது செல்போனில் படம்பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
வீடியோ வைரல்
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைக் கண்ட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்த துள்ளதுடன், கரடி, பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், இவ்வாறு சுற்றித்திரியும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.