மரம் விழுந்ததில் குட்டி ஈன்று உயிரை விட்ட காட்டெருமை


மரம் விழுந்ததில் குட்டி ஈன்று உயிரை விட்ட காட்டெருமை
x

கொடைக்கானல் அருகே மரம் விழுந்ததில் காட்டெருமை ஒன்று குட்டி ஈன்று உயிரிழந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அடிக்கடி நகர் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. இந்தநிலையில் முக்கிய சுற்றுலா தலமான பில்லர்ராக் செல்லும் வழியில் உள்ள வனத்துறை ஓய்வு விடுதி அருகே காட்டெருமை ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மரம் ஒன்று சாய்ந்து அந்த காட்டெருமை மீது விழுந்தது. இதில், அந்த காட்டெருமை சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும் அந்த காட்டெருமை கர்ப்பமாக இருந்துள்ளது. மரம் விழுந்ததில் அந்த காட்டெருமை குட்டியை ஈன்றது. இருப்பினும் அந்த குட்டியை நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து காட்டெருமை மற்றும் குட்டியின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.



Next Story