வீட்டுவசதி வாரியத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பத்திரம் பெறலாம்
முழுத்தொகை செலுத்தி இருந்தால் வீட்டுவசதி வாரியத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பத்திரம் பெறலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கோட்டம் மற்றும் பிரிவுகள் வழியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் வீடுகள், மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் அதற்கான முழுத்தொகையையும் செலுத்தி இருந்தால், அதற்கான ஆவணங்களை வீட்டு வசதி வாரிய கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகங்களில் சமர்ப்பித்து கிரையப்பத்திரம் பெற்று கொள்ளலாம்.
இந்த தகவலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story