வடமதுரை அருகே தேள் கொட்டி சிறுவன் பலி


வடமதுரை அருகே தேள் கொட்டி சிறுவன் பலி
x

வடமதுரை அருகே தேள் கொட்டியதில் சிறுவன் பலியானான்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செம்மனாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்கண்ணன் (வயது 38). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு தீபா, மோனிகா என்ற 2 மகள்களும், வெற்றிவேல் (3) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை ஜெயக்கண்ணன், தனது மகனை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அங்கு வெற்றிவேல் விளையாடி கொண்டிருந்தான். அப்போது தோட்டத்தில் இருந்த செந்தேள் ஒன்று வெற்றிவேலின் கையில் கொட்டியது. இதனால் வலியால் அவன் அலறி துடித்தான்.

இதனை பார்த்த ஜெயக்கண்ணன், தனது மகனை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து வெற்றிவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஜெயக்கண்ணன் தம்பி சந்திரன், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தேள் கொட்டி 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story